திருவண்ணாமலையில் சுற்றுலா கலைவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      திருவண்ணாமலை
photo05

 

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுற்றுலா கலை விழாவினை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை தேரடி வீதி - திருவூடல் சந்திப்பில் சுற்றுலா துறை சார்பில் சுற்றுலாகலை விழா ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.

சுற்றுலாகலை விழா

தி.மலை மாவட்ட சுற்றுலா அலுவலர் சு.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சுற்றுலா விழாவை தொடங்கிவைத்தார். விழாவில் தூசி கே.மோகன் எம்எல்ஏ, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம், வணிக வரித்துறை ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் நகர மன்ற தலைவர் வி.பவன்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருணாகரன் உள்பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். விழாவையட்டி திருப்பத்தூர் திருகுமரன் கைசிலம்பம் ஆட்டம், திருச்சி முத்துக்குமாரின் காளி, கருப்புசாமி ஆட்டம், பெரம்பலூர் செல்லத்துரையின் கரகாட்டம், காவிடி ஆட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலைவிழாவினை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து