திருப்பூரில் அம்மா டிரஸ்ட் சார்பில் நடமாடும் தொடர் மருத்துவமுகாம் அமைச்சர்கள் ஏ.செங்கோட்டையன் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      திருப்பூர்
TITUPUR 1 N

திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில் செயல் படுத்த உள்ள நடமாடும் தொடர் மருத்துவமுகாமை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் சேவை

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரனை நிறுவனராக கொண்டு செயல்பட்டுவரும் அம்மா டிரஸ்ட் சார்பில் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலனஸ் சேவையை  கடந்த மாதம் சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அம்மா டிரஸ்ட் சார்பில் நடமாடும் தொடர் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு,.இதன் முதல் மருத்துவ முகாம் நேற்று  திருப்பூர் காங்கயம் ரோடு சிடிசி பஸ் டிப்போ அருகில் நடந்தது.

அம்மா டிரஸ்ட்

இந்த முகாமுக்கு அம்மா டிரஸ்ட் நிறுவனர்,திருப்பூர் தெற்கு தொகுதி  எம்.எல்.ஏ சு.குணசேகரன்  தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முகாமினை  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை  கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ க்கள் கரைப்புதூர் நடராஜன் , கே.என் .விஜயகுமார் ஆகியோர்  வாழ்த்திப்பேசினார்கள்.
இந்த முகாமில், இலவசமாக பொதுமருத்துவம், இ.சி.ஜி இருதய எக்கோ பரிசோதனை,  நுரையீரல் செயல்திறன் பரிசோதனை, ரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக  மேற்கொள்ளப்பட்டது.

நடமாடும் மருத்துவ வாகனம்

முகாமினை தொடக்கி வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசும்போது கூறியதாவது
அம்மா டிரஸ்ட் நடமாடும் மருத்துவ வாகனம் முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு  சி றப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமத்தில் இருக்கிறவர்களுக்காக இந்த அம்மா டிரஸ்ட்  மருத்துவ மையம் ஏழை எளிய மக்களுக்கு பயனடையும் வரையில் செயல்பட வேண்டும்.

பல்வேறு திட்டங்கள்

ஏழைகளுக்கு சிறந்த மருத்துவசிகிச்சை கிடைப்பதற்கு இது போன்ற நடாமாடும் முகாம்கள்  பயனளிக்கும். அம்மா  காப்பீட்டு திட்டம் உலகளவில் பிரசித்தி பெற்றது. இன்றைக்கு  அதை பாராட்டாதவர்களே இல்லை. அரசு தமிழகத்தில் இன்று பல்வேறு திட்டங்களை  நிறைவேற்றி வருகிறது. அமெரிக்காவில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு கூட தமிழர்கள் மருத்துவம் செய்கிறார்கள். சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் நிறைந்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என்பதால் தான் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூரில் துவக்கப்பட்ட இத்திட்டம் தமிழகம்  முழுவதும் சிறப்பாக உருவாகி செயல்படும். என்றார்.

முன்னுதாரனமாக

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில்.‘
திருப்பூரில் மக்கள் பயனடைய உருவாக்கப்பட்ட அம்மா டிரஸ்ட் மருத்துவ மையம், உடுமலை தொகுதியிலும்  சேவை செய்ய வேண்டும். இதை ஒரு முன்னுதாரனமாக கொண்டு தமிழகம்  முழுவதும் இது போன்ற டிரஸ்ட்கள் உருவாக்கப்பட வேண்டும். என்றார்.

மின்மயானத்தில்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், ‘அம்மா டிரஸ்ட் மருத்துவ சேவை பாராட்டக்கூடியது. இது போல ஏழை, எளிய மக்களுக்கு பயணளிக்கும் வகையில் மின்மயானத்தில் துக்ககாரியங்களில் நல்லடக்கம் செய்ய இயலாத ஏழைகளுக்கு, மின் மயான எரியூட்டு கட்டணத்தை அம்மா டிரஸ்ட் மூலம் வழங்க வேண்டும். அதற்கான கட்டணத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் என்ற முறையில் நானே வழங்குகிறேன். என்றார்.

50 சதவீதம் சலுகை

அம்மா டிரஸ்ட் சார்பில் மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடியவர்களுக்கு மருத்துவ கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படும் என ரேவதி மெடிக்கல் சென்டர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி  விழா மேடையில் தனது பேச்சில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்,திருப்பூர் அம்மா டிரஸ்ட் வளர்ச்சிக்கு உதவி வருவோருக்கு அமைச்சர் செங்கோட்டையன் நினைவு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில்  கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர்  மோகன் கார்த்திக், கே.என்.சுப்பிரமணியம், கண்ணப்பன், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், முன்னாள் எம்.பி காளீயப்பன்,  சிவன்மலை பித்தன்,   பி.கே.எஸ்.சடையப்பன், ஜவஹர் ராஜ், கண்ணபிரான்,   உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து