திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிகுட்பட்ட தோட்டமலை, தச்சமலை மற்றும் மாறாமலை ஆகிய மலைகிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே  28.03.2018 அன்று பார்வையிட்டார்.

வளர்ச்சி பணிகள்

பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள தோட்டமலை குக்கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு தொடக்க பள்ளி சுற்றுசுவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி  2017 - 2018 கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். மேலும், பழங்குடியின மக்களிடம் அடிப்படை வசதிகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மகாத்மாகாhந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் மாறாமலை முதல்  களப்பாறை வரை (1.80 கி.மீ நீளம்) நடைபெற்று வரும் கிராம இணைப்பு சாலை  பணியையும் பார்வையிட்டார்.தச்சமலையில் அரசு தொடக்க பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்து உரையாடி அவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினையும் ஆய்வு செய்தார். பின்னர், தச்சமலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்;. தச்சமலையில்                      ஐபுகுகு  2016 -2017 திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பேச்சிப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடி இனத்தவருக்கான சாதிசான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான உதவிதொகை ஆணைகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கான ஸ்மார்ட் கார்டு ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ராஹ_ல்நாத்                      சார் ஆட்சியர் (பத்மனாபபுரம்) ராஜகோபால் சுன்கரா  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  சிவதாஸ், செயற்பொறியாளர்(வளர்ச்சி) சங்கரஜோதி, உதவிசெயற்பொறியாளர்(வளர்ச்சி) சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்.விஜயகுமார், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து