தனியார் பள்ளிக்கு இணையாக, தரமான கல்வியை அரசு வழங்கி வருகிறது அமைச்சர் கடம்பூர்ராஜூ பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      தூத்துக்குடி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அமைச்சர் கடம்பூர்ராஜூ தொடங்கி வைத்து சிறப்புறையர்றறினார். மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் தலைமை வகித்தார். போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விழாப் பேருரையில் பேசியதாவது:

பயிற்சி வகுப்புகள்

அம்மா , ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால், அனைவரும் கல்வி அறிவு பெற்று இருக்க வேண்டும் என்ற உயர்ந்து நோக்கத்தோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப  அம்மா , காவல் தெய்வமாக இருந்து தமிழகத்தை பாதுகாத்து வந்தார்கள்.  அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். விலையில்லா புத்தகம், குறிப்பேடுகள், இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, காலணிகள், வண்ண பென்சில்கள், சிலேட்டுகள், உலகப்படம், விலையில்லா மிதிவண்டி என பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத கல்வி புரட்சியினை  அம்மாவின் அவர்களின் அரசு தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஏற்படும் மன உலைச்சலை போக்கிடும் வகையில், தமிழக அரசு கிரேடு முறையை அமல்படுத்தியது. மேலும், பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பெறும் மதிப்பெண்களை 10 நிமிடத்தில் அவர்களது அலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு நீட் தேர்வு அறிவித்திருந்த போது மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை அறிந்து,  அம்மா  ஒருவருட கால அவகாசம் கேட்டார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த வருடம் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. இவ்வருடம் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கிடும் வகையிலும், சிறந்த பயிற்சி அளித்திடும் வகையிலும், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக தமிழகத்தில் ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நேசனல் பொறியியல் கல்லூரியில் 350 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில வழியில் போட்டித் தேர்வு மற்றும் திறன் பயிற்சிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 2018 ஏப்ரல் 9ம் தேதி முதல் ஒரு மாதகாலத்திற்கு பயிற்சிகள் திட்டமிட்ட முறையில் இணையதளம் மற்றும் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. இதனை மாணவ, மாணவயிர்கள் நன்கு முறையில் பயன்படுத்திக் கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார்கள்.

இவ்விழாவில் இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை முனைவர்.அ.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மனோகரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் பி.அனிதா, சேர்மன், நேஷனல் பொறியியல் கல்லூரி கே.ரா.ராமசாமி, இயக்குநர் நேஷனல் பொறியியல் கல்லூரி சொக்கலிங்கம், மேனேஜிங் டைரக்டர் நேஷனல் பொறியியல் கல்லூரி கே.ரா.அருணாசலம். நகராட்சி ஆணையர், க.அச்சையா, நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.சண்முகவேல், வட்டாட்சியர் டி.ஜாண்சன் தேவசகாயம், மாவட்ட கல்வி அலுவலர் வி.சீனிவாசன், ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து