முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓம்சக்தி மாரியம்மன் ஆலய தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், புலிவலம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி மாரியம்மன் ஆலய 35ஆம் ஆண்டு உற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம் 

உற்சவ விழாவையொட்டி கடந்த 30ஆம் தேதி 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அதனையடுத்து உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 108 கோபூஜை நடைபெற்றது. கடந்த ஏப்;ரல் முதல்தேதி அதிகாலை புலிவலம் ஓம்சக்தி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஓம்சக்தி பக்தர்கள் அம்மனை அலங்கரித்து வாகனத்தில் எடுத்துகொண்டு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர். பக்தி பாடல்கள் முழங்க வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.  விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையொட்டி பக்தர்கள் சக்தி கரகம், அலகு காவடிகள், தீர்த்தகுடம், பால்குடம், தயிர்குடம், பஞ்சாமிர்த குடம், பன்னீர் குடம், விபூதி குடம், சந்தன குடம், இளநீர் காவடி, தீச்சட்டி எடுத்து  ஊர்வலமாக வந்து இரவு 10 மணிக்கு அம்மன் ஆலயத்திற்கு முன்பு பக்தர்கள் பூ குழியில் (தீ மிதித்தல்) இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று  நடைபெற்றது. புலிவலத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அபிசேகம் செய்து பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை சரவணன், ராமமூர்த்தி தலைமையில் ஓம்சக்தி பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து