முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஷிப்: சிந்து - சாய்னா முன்னேற்றம்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. 29-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்எஸ் பிரனோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனாவின் பாங்ஜியே காவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா, 21-18, 21-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து, சீனாவின் சையோக்சின் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து