முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 170-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 170-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம்   துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு. சுனில் பாலிவால், இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டார்.
முன்னதாக, தொண்டியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறையில் நிறுவப்பட்டுள்ள கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினங்களான அரிய வகை கடல் மீன்கள், நண்டுகள், மெல்லுடலிகள், இரால் வகைகள், சங்குகள், சிப்பிகள், நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடல் புல் வகைகள், பாசிகள், கடற் குதிரைகள், பவளப் பாறைகள், கடல் விசிறிகள் போன்ற உயிரினங்கள் மற்றும் பல வகையான மண் மாதிரிகள், பாறைகள் என நிலவியல் சார்ந்த பல வகை மாதிரிகளையும் பார்வையிட்டார்.
மேலும் அவர் அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தில் துணைவேந்தர் செயலகத்தில் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதல் தற்போதைய துணைவேந்தர் வரை அவரவர்கள் பதவி காலத்தில் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சாதனைகள் குறித்த புகைப்படத்துடன் கூடிய மின்னணு காட்சிப் பலகைகளைத் திறந்து வைத்தார். அந்நிகழ்வின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், முனைவர் ளுஆ. இராமசாமி, பேரா. சுபா~; சந்திரபோஸ், பேரா. அ.நாராயணமூர்த்தி, பேரா. ஜெ.ஜெயகாந்தன், பேரா. குருநாதன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர், பேரா.ஹா. குருமல்லே~; பிரபு, பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து