முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.542.02 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      தமிழகம்
Stalin 2024-11-26

சென்னை, ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி; இராணிப்பேட்டை மாவட்டம் - மேல்வெங்கடாபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், சென்னை மாவட்டம் – திருவொற்றியூர் ஆகிய இடங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 42 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் - செட்டிக்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துவாக்குடி, சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி, தேனி மாவட்டம் – வீரபாண்டி, மதுரை மாவட்டம் – செக்கானூரணி, கோயம்புத்தூர் மாவட்டம் – தொண்டாமுத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் – தென்னாங்கூர், செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கம், சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களிலுள்ள அரசு கல்லூரிகளில் 45 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 34 வகுப்பறைகள் 19 ஆய்வகங்கள், பணிமனை, மகளிர் விடுதி மற்றும் இதர கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐந்து அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 255 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 திறன்மிகு மையங்கள்; அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்காக, 198.84 கோடி ரூபாய் செலவில் கற்றல் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருள்; என மொத்தம் 542.02 கோடி ரூபாய் செலவிலான உயர்கல்வித்துறை சார்ந்த 15 கட்டிடங்களை திறந்து வைத்து, ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து