முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த அளவு பெட்ரோலுடன் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்-நிவத்திகள்தெரியுமா?

புதன்கிழமை, 9 மே 2018      மோட்டார் பூமி
Image Unavailable

Source: provided

குறைந்த அளவு எரிபொருளுடன் காரை இயக்குவது மிக மோசமான விஷயம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

குறைவான எரிபொருளுடன் இயக்கும்போது, எஞ்சினுக்கு எரிபொருளை செலுத்தும் ஃப்யூவல் பம்ப் அமைப்பில் பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோல், டீசலில் உள்ள உயவுத்தன்மையே, ஃப்யூவல் பம்ப்பிற்கான உயவுப் பொருளாகவும், குளிர்விப்பு பொருளாகவும் இருக்கிறது.
  
1. குறைவான அளவு இருக்கும்போது போதிய எரிபொருள் பம்ப் அமைப்பில் காற்று உறிஞ்சப்பட்டு அதிக வெப்பம் ஏற்படும். இதனால், எரிபொருள் பம்ப் சீக்கிரமாகவே பாதிப்படையும். ஃப்யூவல் பம்ப் மிகவும் துல்லியமான அமைப்பு என்பதால், இதில் பாதிப்புகள் ஏற்படும்போது, அதிக செலவு வைத்துவிடும்.

2.உறிஞ்சப்படும்போது, அது வடிகட்டி அமைப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். வடிகட்டி அமைப்பில் எரிபொருள் சீராக இல்லாமல் கசடுகள் தங்கி தடை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி ஃபில்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதுவும் பாக்கெட்டை பதம் பார்க்கும் விஷயமாக மாறும்.
  
3. வடிகட்டி அமைப்பில் எரிபொருள் தடைபட்டு சீராக செல்ல இயலாமல் போகும்போது, அது கார் எஞ்சினுக்கும் பிரச்னை தரும். இதனால், கார் எஞ்சினின் ஆயுட்காலம் சீக்கிரமாகவே குறையும் என்பதுடன், அடிக்கடி பராமரிப்பு தேவை என்பதால், செலவீனமும் கூடுதலாகும்.
  
4. தற்போது வரும் கார்களில் சென்சார்கள் மூலமாக கசடுகள் தடுக்கப்படும் நுட்பமும், இரண்டு ஃபில்டர்கள் மூலமாகவும் வடிகட்டும் அமைப்பும், எரிபொருள் செலுத்தும் அமைப்பும் சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டவை. இருந்தாலும்,பிரச்னையை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்த வழி.
  
5. இவை எல்லாவற்றையும்விட, ஒரு நம்பிக்கையில் குறைவான எரிபொருளுடன் செல்லும்போது காரில் எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து நின்று போனால், மீண்டும் எரிபொருள் நிரப்பி சரிசெய்வதர்கான ரிப்பேர் செலவும் அதிகமாகும். குறிப்பாக, டீசல் கார்களின் எஞ்சினில் காற்று சென்றுவிட்டால், அதனை சரிசெய்வதற்கு அதிக செலவாகும்.

6. அது நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் நின்றுபோனால் அல்லாட வைத்துவிடும். அதேபோன்று, ஆள் அரவமற்ற இடங்களில் நின்றுபோனாலும் கஷ்டம் என்பதும் நடைமுறை சிக்கல்.
  
சில வழிமுறைகள்...

1. இதுபோன்ற தடங்கல்களையும், செலவீனத்தையும் தவிர்த்துக் கொள்வதற்கு சில எளிய உபாயங்களை கடைபிடித்தால் போதுமானது. கால் டேங்க் இருக்கும்போதே எரிபொருளை நிரப்பி விடுங்கள்.
  
2. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் போன்ற கணக்கீடு தகவல்களை முழுவதுமாக நம்ப வேண்டாம். உங்களது கார் ஓட்டும்முறைக்கு தக்கவாறு, காரின் எரிபொருள் செலவு அமையும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அது விரைவாக குறையும்.
  
3. எரிபொருள் டேங்க்கில் கால் பங்கு பெட்ரோல் அல்லது டீசல் இருக்கும்போதே, மீண்டும் எரிபொருள் நிரப்பி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் மிகவும் சிம்பிளான வழி. ஒரு வாரத்திற்கு இவ்வளவுதான் தேவைப்படும் என்ற நீங்களாக ஒரு கணக்குப்போட்டு, பார்க்க வேண்டாம்.
  
4. எரிபொருள் இல்லாதது குறித்து எச்சரிக்கை விளக்கு ஒளிர துவங்கிய உடன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பி விடுங்கள். வெளியூர் செல்லும்போது இவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால், மொபைல்போன் அப்ளிகேஷன் அல்லது கூகுள் மேப் மூலமாக அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களை கண்டறிந்து எரிபொருள் நிரப்புங்கள்.

கார்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்:-  எரிபொருள் மற்றும் எரிவாயுவின் செயல்பாடு, டயர்களின் சுழற்சி, இயங்கும் திறன் இவை தான் ஒரு கார் சரியாக செயல்படுவதற்கான அறிகுறிகள். இது அனைத்து கார்களுக்கும் பொருந்தும்.

இதில் எதாவது ஒரு தளத்தில் கோளாறு ஏற்பட்டால் அதற்கு கார்கள் தான் காரணம் என்பது அல்ல. கோளாறுக்கான பொறுப்பு எப்போதும் நம்மிடம் தான் உள்ளது.
  
கார்களுக்கான ஆயுள் என்பது நாம் அதை இயக்கும் விதத்தில் தான் அடங்கியுள்ளது. அதனால் கார் ஓட்டும்போது அதனுடைய ஆயுளையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கியர்ஷிஃப்ட் பயன்பாட்டில் அக்கறை தேவை கார் ஓட்டும் போது பலர் கியரை தேவையில்லாமல் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒரு ஸ்டைல் என நினைத்து செய்யும் இந்த பழக்கம் இறுதியில் கியர்பாக்ஸில் வேட்டு வைத்துவிடும்.  

குறைந்த அழுத்தம் கொடுத்தால் கூட கியர்பாக்ஸ் பழுதை சந்திக்கும். எப்போதும் கியரை கடிகாரத்தில் 9 மணி மற்றும் 3 மணி நேரங்கள் காட்டும் அளவீட்டில் வையுங்கள்.

அதுதான் எப்போதும் கியரின் மீது உங்களுக்கு சரியான கட்டுப்பாட்டை கொடுக்கும். அவசர கதியில் கியரின் பயன்பாடு காலை வாராமல் பாதுகாக்கும்.
  
பார்க்கிங் பிரேக்குகள் கட்டாயம்:- டிரைவிங் கிளாஸ் மூலம் கார் கற்றுக்கொண்டவர்கள் அனைவரிடமும் பயிற்சியாளர் நிச்சயம் இதை சொல்லி இருப்பார்கள்.
பார்க்கிங் பிரேக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், காரின் மொத்த எடையும் பார்க்கிங் பௌல் என்ற பகுதிக்கு வந்துவிடும்.
  
கியர்பாபாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த பார்க்கிங் பௌல் சேதமடைந்தால், அது கியர்பாக்ஸிற்கும் இட்டுச்செல்லும்.

தேவையில்லாத சுமை : ஒரு சில கார் பயனாளிகளுக்கு உப்பு, கற்பூரம் முதல் ஃபிரிட்ஜ் ஏசி போன்ற பிரம்மாண்ட அளவிலான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்க அல்லது கொண்டுசெல்ல கார் தான் வேண்டும்.
  
காருக்கான ஆயுள் என்பது அதில் நாம் ஏற்றும் சுமையிலும் உள்ளது என்பதை பல உரிமையாளர்கள் உணரவேண்டும்.

பொதி மாடு போல காரில் நாம் ஏற்றும் சுமை எரிவாயு திறனை மட்டும் வீனடிக்காமல், காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்ற அடிப்படையான அம்சங்களையும் கெடுத்துவிடும்.
  
எரிவாயு சேமிப்பு:- கார் ஓட்டும் பலருக்கும் எரிவாயு கொள்ளவை சாராசரியாக பராமரிக்கும் எண்ணமில்லை. எரிவாயு குறியீடு சிறிதளவில் இருந்தாலும் கூட, பெட்ரொல் போட மனம் வருவதில்லை.

குறைந்தளவிலான எரிவாயு உடன் கார் இயங்கி வந்தால், டேங்க் பயங்கர சூடாகி விடும். இதுபோன்ற பழக்க வழக்கம் காரின் ஆயுளை சீக்கிரம் மட்டுப்படுத்தி விடும்.
  
குறைந்தது டேங்கின் ஒரு அடி அளவாவது எரிவாயு இருந்தால், உங்கள் கார் தப்பித்தது. அதனால் எரிவாயு குறியீட்டின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கட்டும்.
  
பிரேக்கிங் பயன்பாடு:- எதிர்பாராத விதமாகவோ அல்லது தேவையை கருதியோ பிரேக் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் நம்முடன் எத்தனை பேர் காரில் உள்ளார்கள் என்பதில் தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய செய்திஅதிக அழுத்தமுள்ள காரில் இதுபோன்ற திடீர் அல்லது சூழ்நிலை கருதி பிரேக் பிடிப்பதால் பிரேக்கிங் பேட் மற்றும் ரோட்டோரில் கோளாறு உருவாகும்.
  
எப்போது நிதானமாக, அல்லது கவனத்துடன் கார் ஓட்டும்போது பிரேக்கிங்கை பிடித்தால், ஓரளவு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.இதுபோன்ற செயல்முறைகளுடன், குளிர்காலங்களில் எஞ்சினை அவ்வப்போது இயக்குவது, கிளட்ச்சுகளை தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருப்பது, போன்ற பழக்க வழக்கங்களும் காரின் ஆயுளை கூட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து