பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      வர்த்தகம்
petrol -diesel price 2018 5 23

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. கடந்த 13-ம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத்தொடங்கியது. 16 நாட்களாக தினமும் 20 காசு,30 காசு என அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், 17-வது நாளாக நேற்றும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து உள்ளது. பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.81.43 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.73.18 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து