இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு பாலஸ்தீன மருத்துவ தன்னார்வலர் பலி

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      வர்த்தகம்
Israel 2018 06 04

ஜெருசலேம், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன மருத்துவ தன்னார்வலர் பலியாகியுள்ளார்.

கடந்த மார்ச் முதல் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் நாள்தோறும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு தூப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

பலர் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்தப் போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவ தன்னார்வலர்தான் 21 வயதான ராசன் அல் நஜ்ஜர். இவர்தான் தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி இருக்கிறார். ராசனின் நெஞ்சு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரசானின் இறுதி சடங்கில் ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீன மக்கள் கலந்து கொண்டு ரசானின் இறப்புக்கு நீதிக் கேட்டு குரல் கொடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து