முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற்ற  விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் ராஜா தினகர் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் தொடர்;ச்சியாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சார்பாக பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி, குமரன் நடுநிலைப்பள்ளி, லூயிஸ் லெவல் மெட்ரிக்பள்ளி, ஆல்வின் மெட்ரிக்பள்ளி, கொழும்பாலம் உயர்நிலைப்பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, ராஜா தினகர் ஆர்.சி உயர்நிலைப்பள்ளி, புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, புனித ஜோசப் உயர்நிலைபள்ளி, நேஷனல் அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  ராஜா மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, முகம்மது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹவுசிங்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் என சுமார்900க்கும் மேற்பட்டோர்  இப்பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்போம், மண்வளம் காப்போம் , மரம் வளர்ப்போம்;, காற்றில் மாசை தவிர்ப்போம் , நிலம், நீர், காற்றின் தூய்மை நமது சுகாதாரத்தின் மேன்மை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு வாசகங்களை கோசமிட்டவாறும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 இப்பேரணியில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்த்திட வேண்டும் என்பதனை வலியுறுத்திடும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்திடும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியானது ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி  சிகில் ராஜவீதி, செய்யதம்மாள் மருத்துவமனை, வண்டிக்காரத் தெரு, அரண்மனைச் சாலை வழியாக ராஜா தினகர் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனஉயிரின காப்பாளர் டி.கே.அசோக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர்கள் மரு.ஆர்.பரணிக்குமார், மரு.பி.வித்யா பரணிக்குமார், தேசிய பசுமைப்படை ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பெர்னாடிட் உள்பட தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேசிய பசுமைப் படையின் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து