ரத்ததான முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      தேனி
bol d donate news

தேனி-    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பூஞ்சோலை பொதுநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு இரத்த கொடையினை வழங்கிய 200 கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இரத்தம் என்பது நம் உடலில் ஓடக்கூடிய திரவம், நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜன் வாயுவை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பொருளாகும். இரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய திரவம் ஆகும். நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், நிறைய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், இரத்தம் என்ற அதிசயத் திரவத்தை நாம் இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. நம் உடலில் உள்ள இரத்தம், காயப்பட்டவர்களுக்கும், இரத்தம் தேவைப்படுவோருக்கும் வழங்கக்கூடிய ஒரு பரிசுப் பொருளைப் போன்றதாகும். நாம் ஒவ்வொரு முறை தானமாகக் கொடுக்கும் ஒரு யூனிட் இரத்தம் நான்கு உயிர்களைக் காக்கும்.
 விபத்துக்களில் சிக்கும் போது இரத்த இழப்பு ஏற்படுகிறது. பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும், இரத்த சோகை அதிகம் உள்ளவர்களுக்கும், பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பிற்கும், இரத்தப் புற்று நோய் தாக்கியவர்களுக்கும், இது தவிர தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளுவதற்கு இரத்தம் தேவைப்படுகிறது. இரத்ததானத்தின் மூலம் மேற்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளவதற்கு ஏதுவாகிறது. மேலும், இரத்தம் அளிப்பதன் மூலம் மரடைப்பு தவிர்க்கப்படுவதோடு, புதிய இரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. 18-வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்ததானம் செய்திடலாம். நமது உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானத்தின் போது 350 மில்லி லிட்டர் மட்டுமே இரத்தம் எடுக்கப்படுகிறது. 24 மணிநேரத்தில் நமது உடலில் எடுக்கப்பட்ட இரத்தம் இயற்கையாகவே ஈடுசெய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இரத்ததானம் அளித்திட முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
 இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.சரஸ்வதி     உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து