தேனி மாவட்டத்தில் உயிரிழந்த கழக நிர்வாகிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      தேனி
ops news

தேனி - தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் அவர்களின் தாயார் மறைவையொட்டி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ராமுத்தாயம்மாள் அவர்களின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஆர்.டி.கணேசன், அவருடைய சகோதரர் நேருதாஸ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னதாக நேற்று முன்தினம் சாலை விபத்தில் அகால மரணமடைந்த டி.கள்ளிப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பாப்பாஇளமுருகனின் கணவரும் கழக மாவட்ட பிரதிநிதியுமான  இளமுருகன், தென்கரை பேரூராட்சி கழக செயலாளர் பீமன் அவர்களின் அண்ணன் மகன் அய்யாத்துரை ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் திருவுருபடத்திற்கு மலர்தூவி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து  கழக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த தேனி ஆனந்தராஜ், பாலகிஷ்ணாபுரம் ஊராட்சி செயலாளர் பகவதி அவர்களின் அண்ணன் மகன் பாலமுருகன் ஆகியோர் இயற்கை மரணமடைந்ததையொட்டி அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று இறந்தவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட கழக துணை செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவக்குமார், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி நகர் கழக செயலாளர் முருகேசன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன்  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து