முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - பார்லி.யில் இன்று வாக்கெடுப்பு

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடக்கும் விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதல்முறையாக மக்களவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளை இணைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அது தோல்வியையே சந்தித்தது. மக்களவையில் பா.ஜ.க.வுக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதால் தற்போதைய நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியடையவே செய்யும். எனினும், பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு முக்கிய வாய்ப்பாக இது கருதப்படுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் 2 நாட்களும் தவறாமல் அவை அலுவல்களில் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், தலைமை கொறடாவுமான அனுராக் தாக்குர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவையில் பேசிய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிச்சயமாக தோல்வியையே சந்திக்கும். ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 3 இல் 2 பங்கு பெரும்பான்மை உள்ளது. மேலும் நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

லோக்சபாவில் கட்சிகளின் நிலவரம்:

பாஜக 273
காங்கிரஸ் 48
அதிமுக 37
திரினமூல் காங்கிரஸ் 34
பிஜூ ஜனதாதளம் 20
சிவசேனா 18
தெலுங்குதேசம் 16
டிஆர்எஸ் 11
சிபிஎம் 9
சமாஜ்வாடி கட்சி 7
தேசியவாத காங்கிரஸ் 7
லோக் ஜனசக்தி கட்சி 6
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4
ஆர்ஜேடி 4
அகாலிதளம் 4
ஆம் ஆத்மி கட்சி 4
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3
சுயேச்சைகள் 3
ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3
இந்திய தேசியலோக்தளம் 2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2
ஐக்கிய ஜனதாதளம் 2
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2
அப்னா தளம் 2
பாமக 1
சிபிஐ 1
அகில இந்திய என் ஆர்காங்கிரஸ் 1
மதச்சார்பற்ற ஜனதாதளம் 1
மற்றவர்கள் 10

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து