முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் ஒரு சதவீத தள்ளுபடி: மக்கள் வரவேற்பு - அமைச்சர் தங்கமணி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் ஒரு சதவிகித தள்ளுபடி அளிக்கும் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார். குமாரபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மின்மாற்றி வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்மாற்றிகளை நிறுவுவது மின்வாரியத்தின் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது. மின்சார வாரிய பணியாளர்கள், வேண்டுகோள் விண்ணப்பம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் மாறுதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கொள்கை முடிவின் அடிப்படையில் இப்போது மனுக்கள் ஆன்லைனில் பெறப்பட்டு இருக்கின்றது. 14,000 மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றது. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. யார், யார் எங்கே கேட்டிருக்கின்றார்களோ அந்த இடங்கள் காலியாக இருப்பின் அந்த இடங்கள் வழங்கப்படும். நேர்மையான முறையில், ஒளிவு மறைவற்ற முறையில் இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மின்துறை பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலமாக தேர்வு நடைபெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியானது 3, 4 மாதங்களில் முடிவடையும். மின்கட்டணம் ஆன்லைனில் செய்வதற்கு ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்குகின்றோம். தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து