முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் கூட லூர் பகுதியில் தொடர் மழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி.பாராம்பரியம் மாறமால் உழவுப் பணிகளில் சுறுசுறுப்பு.

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 கம்பம்,- தேனி மாவட்டம் கம்பம் கூட லூர் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழையால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் இப்பகுதி நெல் விவசாயிகள் ஆர்வத்துடன் வயலில் பாரம்பரியம் மாறமல் ஏர் பூட்டி உழவு செய்து நிலத்தை பன்படுத்தி வருகின்றனர்.கம்பம்,கூட லூர்,உத்தமபாளையம்,சின்னமனு£ர் மற்றும் இதனை சுற்றியயுள்ள பகுதிகளில் விவசாயமே முக்கிள தொழிலாக கொண்டுள்ளனர்.இப்பகுதியில் முழுக்க முழுக்க முல்லைப் பெரியாற்று அணை மற்றும் பருவ மழையை நம்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.கடந்த 2015&2106 ல் பருவ மழை பொய்த்தாதல் பெரும்பலோனோர் விவசாயம் செய்யமால் நஷ்டமடைந்தனர்.இதில் பலருக்கும் தற்போது வரை அரசு இழப்பீடு வழங்க வில்லை.இதனை தொடர்ந்து 2017 2018 ல் வடகிழக்கு பருவ மழை அதன்பின் சமீபத்தில்கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது.இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் சாகுபடியின் பரப்பளவை அதிகப்படுத்தினர்.இதில் தக்காளி,வெங்காயம்,வாழை,முருங்கை பயிரிட்டவர்கள் அதிக லாபம் அடைந்தனர்.இந்நிலையில் தற்பொழுது தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கம்பம் வட்டாரம் உத்தமபாளையம் வட்டாரம் சின்னமனு£ர் வட்டாரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் வயலில் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இம்மாத துவக்கத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 135.20 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1983 கன அடியாகவும் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 2000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.மழையளவு பெரியாறு 15,4 மி,மீ தேக்கடி 15.5 மி.மீ கூட லூர் 4 மி.மீ உத்தமபாளையம் 5.8.மி.மீ என பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.சமீபத்தில் பெய்த மழை நீர் முறையாக சேமிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டால் முப்போக நெல் சாகுபடி செய்யலாம்.விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து