உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது: 10 பேர் பட்டியலில் எம்பாப்பே, கிரீஸ்மேன்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      விளையாட்டு
Kylian Mbappe - Antoine Griezmann 2018 7 25

பாரீஸ் : உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது.

பிரான்ஸ் சாம்பியன்...

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும். இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது.

3 பிரான்ஸ் வீரர்கள்...

இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர். பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்பாப்பே, கீரிஸ்மேன் ஆகியோருக்கு இடம் கிடைத்து உள்ளது. இருவரும் இந்த உலக கோப்பையில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். இதேபோல பிரான்ஸ் நாட்டின் பின்கள வீரரான ரபெல் வரனேயும் அந்த பட்டியலில் உள்ளார்.

நெய்மருக்கு இடம்....

உலக கோப்பையில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனும் இடம் பெற்றுள்ளார். லியோனல் மெஸ்சி, கிறிஸ்டினோ ரொனால்டோ ஆகியோருடன் இவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு இடம் இல்லை.

10 வீரர்கள் விவரம்:-

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்பே, கிரீஸ்மேன், ரபெல் வரெ (பிரான்ஸ்), ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் (பெல்ஜியம்), ஹாரிகேன் (இங்கிலாந்து) மோட்ரிச் (குரோஷியா), முகமதுசாலா (எகிப்து).

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து