9 மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      மதுரை
mdu pro news

மதுரை,-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைவருக்கும் நலவாழ்வுத்திட்டம் தொடர்பாக மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் மரு.கே.குழந்தைசாமி  முன்னிலையில் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்:
 நலவாழ்வு மையத்தில் தாய்சேய் நலம், பச்சிளம் குழந்தைகள் நலம், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் நலம், குடும்பநலம், தொற்றுநொய் தடுப்பு மற்றும் சிகிச்சை, தொற்றாநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை. பல் சிகிச்சை, மனநலம், முதியோர்கள் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை அவசர முதல் உதவி சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 6 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, நலவாழ்வு மையங்களில் பணியாற்றுவார்கள். 
 பல் சிறப்பு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்ற இது போன்ற சிகிச்சைகள் அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் தகுதி பாராமல் மருத்துவ சேவை வழங்கப்படும்.  மாண்புமிகு பாரத பிரதமர்   இத்திட்டத்தினை வருகின்ற ஆகஸ்டு-15 அன்று கூடுதலாக தமிழகத்தில் துவக்கி வைக்க உள்ளார்கள்.  அனைவருக்கும் நலவாழ்வுத்திட்டம், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறை மூலம் அனைவருக்கும் நலவாழ்வுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படவுள்ளது.  சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் காரணமாக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர்   தெரிவிக்கையில்:
 அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், கிராம நலவாழ்வு மையம், அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் 2016-17ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி. புதுக்கோட்டை, பெரம்பலூர் சுகாதார மாவட்டங்களில் உள்ள சூளகிரி, விராலிமலை, வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 67 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட) முன்னோடி திட்டமாக (Pடைழவ Pசழதநஉவ) தோற்றுவிக்கப்பட்டது. 
..  ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24ஒ7 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து குடிமக்களும் அவர்களது தகுதி பாராமல் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும்.  நோய் தடுப்பு சுகாதார மேம்பாடு, நோய் நீக்கம், மறுவாழ்வு மற்றும் நோய் தனிப்பிற்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும்.  துணை சுகாதார நிலையங்களை வலுவடைய செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
 தமிழ்நாடு அரசு 2017-18ஆம் ஆண்டில் ஒரு சுகாதார மாவட்டத்திற்கு ஒரு வட்டாரம் என்ற விகிதத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 918 துணை சுகாதார மையங்கள் மற்றும் 184 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் (வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட) இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ.2474.07 இலட்சம் நிதி ஒப்பளிக்கப்பட்டது.  பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 42 சுகாதார மாவட்டங்களில் 985 துணை சுகாதார நிலையங்களை மத்திய அரசின் உதவியோடு கிராம நலவாழ்வு மையங்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இது மட்டுமின்றி 510 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 420 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் 5 கேரவன் மருத்துவமனைகள் நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு.சித்ரா  , இணை இயக்குநர்கள் மரு.உமா  , மரு.தாமரைச்செல்வி  , மரு.பிரேம்குமார்  , மரு.ஜெரால்டு  , 9 மாவட்டங்களைச் சார்ந்த துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்), மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து