பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Petrol price1(N)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.46-காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று முன்தினம் பெட்ரோல் விலையிலிருந்து 7 பைசா அதிகரித்து ரூ.79.46 காசுகளாகவும், அதேபோல், டீசல் விலையிலிருந்து 10 பைசா அதிகரித்து ரூ.71.84 காசுகளாகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து