பெரியகுளம் தண்டுபாளையம் மகாசக்தி மகாகாளியம்மன் திருக்கோவில் மறுபூஜை

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தேனி
periyakulam news

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் தண்டுபாளையம் மகாசக்தி மகா காளியம்மன் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த வாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று திருவிழா மறுபூஜையை முன்னிட்டு காலையில் ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருக்கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு வளையல்காரத்தெரு மகளிர் குழு சார்பில் வெள்ளியிலான சூலாயுதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா மற்றும் மறுபூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ கவுண்டர், இ.நாகராஜபிள்ளை, கண்ணன் நாயுடு, அரியபுத்திரபிள்ளை உள்ளிட்ட விழாகுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து