முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோ-யோவில் அப்பத்தி ராயுடு தேர்ச்சி ஆசிய கோப்பையில் வாய்ப்பு!

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஒரு வழியாக யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார் இந்த ’சிஎஸ்கே’ ராயுடு. ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் நடந்தது.  இதில் அம்பத்தி ராயுடு தேர்வு பெறவில்லை. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் ராயுடு தோல்வி அடைந்தார் .

இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்துவிட்டது. சிறப்பான ஃபார்மில் இருந்தும் ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தனர்.

இந்நிலையில் இந்திய ஏ, இந்திய பி, இந்திய ரெட், கிரீன், புளு அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் எதிலும் அம்பத்தி ராயுடு பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் யோ யோ டெஸ்டில் தேர்வு பெற்றார். இதையடுத்து இந்திய ஏ அணியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

பின்னர் பேசிய ராயுடு, ’யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெறாதது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. அந்த உடல் தகுதி தேர்வு முறை குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியானதுதான். ஆனால் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டேன். சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு சில பிட்னஸ் கோல்கள் தேவைதான். கடந்த சில நாட்களுக்கு முன், யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்றேன். இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறேன். தேசிய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போதுமே பெருமையான விஷயம்தான்’ என்றார்.

அடுத்த மாதம், நடக்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு சேர்த்துக்கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து