செப்.1ம் தேதி தேனியில் திருநங்கைகள் மாநாடு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      தேனி
priyakulam news

தேனி  தேனியில் வரும் செப்டம்பர் 1ம் தேதி திருநங்கைகள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மாநாட்டில் திருநங்கைகளுக்கு பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி கூறுதல், திருநங்கைகளின் வாழ்வியல் குறித்த குறும்படம் வெளியிடுதல், நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், மிஸ் தேனி 2018 ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட திருநங்கைகளின் தலைவி கனகா நாயக் கூறும்போது இம்மாநாட்டில் நலிவுற்ற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ளோம். மேலும் திருநங்கைகளுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். இம்மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தேனி சாரா அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து