முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்: கோரிக்கைகளை வலியுறுத்தி செப்,7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- இலங்கை கடற்படையால்  சிறை பிடிக்கப்படும் படகுகளை இலங்கை அரசுடைமையாக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
   இலங்கை கடற்படையினர்  எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம்  உள்பட தமிழக மீனவர்களின் 192 படகுகளை விடுவிக்கோரியும்,   டீசல் விலை உயர்வால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் படகுகளுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தேவையான அளவு டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும். இலங்கை அரசு தற்போது புதியதாக இயற்றியுள்ள சட்டத்தின்படி, வெளிநாட்டு படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு  இலங்கை கடலில் நிறுத்தி இயற்கை சீற்றத்தில் சிக்கி சேதமடைந்த படகுகளுக்கு மத்திய,மாநில அரசுகள் தலா ரூ,20 லட்சம் வரை நிவாரணம் வழங்ககோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வவிலுயுறுத்தி திங்கள் கிழமை முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.இதனால் சுமார் நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.மேலும் மீனவர்களின் கோரிக்கைகளை  மத்திய,மாநில அரசுகள்நிறைவேற்ற வலியுறுத்தி மீனவர்கள் வருகிற 7–ந்தேதி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து மீனவர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து மீனவர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் தாமதம் செய்து வரும் நிலை ஏற்பட்டால் தமிழக மீனவர்கள் ஒன்று திரண்டு டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது என மீனவ சங்க பிரிதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து