பெரியகுளத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      தேனி
5 lic news

 தேனி- டெல்லியில் நேற்று விவசாயிகள், தொழிலாளர்கள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமுல்படுத்துதல்,  இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க கோருதல்  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய மாபெரும் பேரணியை ஆதரித்து பெரியகுளம் எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினர், கிளை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். சார்பாளர் ஷீலாதேவி விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். கிளை சங்க செயலாளர் அகமது ஆதம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிளை சங்க உறுப்பினர்கள், முதல்நிலை அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து