விநாயகர் சதுர்த்தி விழாயின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      சிவகங்கை
6 siva pro news

      சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாயின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டி.ஜெயச்சந்திரன்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.ஜெயகாந்தன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
         சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு வழிகாட்டுதலின்படி நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சிலை அனைத்து வழிபடும் இடத்திற்குரிய அனுமதியினை முன்கூட்டியே சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருடன் பெற்றிட வேண்டும். அனுமதி பெறுவதற்கு முன் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியோரின் தடையின்மைச் சான்று பெற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சிலைகள் வடிவமைத்திட வேண்டும். குறிப்பாக சுற்றுச்சுழல் பாதிக்காத அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் போன்ற எளிதில் கரையாத பொருட்களின் மூலம் சிலைகள் தயாரிப்பதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதேபோல் அனுமதி பெற்ற இடங்களின் மட்டுமே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதுடன் அனுமதி வழங்கிய பாதைகளில் சென்று விநாயகர் சிலையினை ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் கரைத்திடும் வகையில் விழா தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழாக்காலங்களில் அனுமதி பெற்ற நேரங்களில் மட்டுமே பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் இடங்களை எளிதில் தீப்பற்றாத வண்ணம் தகரத்தால் ஆன கொட்டகை அமைத்திட வேண்டும். மேலும் தீதடுப்பான் போன்ற கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
         மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பதற்கென இடங்கள் முன்கூட்டியே காவல் துறையின் மூலம் அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து விழாவை சிறப்பாக நடத்திடும் வகையிலும் அதேபோல் அனைத்து சமுதாயமும் பாராட்டும் வகையிலும் இவ்விழா இருந்திட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய பாதுகாப்புகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அதற்கேற்ப எல்லோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறந்த முறையில் விழாவை நடத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.ஜெயகாந்தன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
      இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .ஜி.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராஜேந்திரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து