பல்கேரிய பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
Ramnath Bulgarian P M 2018 09 07

பல்கேரியா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் பாய்கோ போரிசோவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் குறித்து பல்கேரிய பிரதமரிடம் விளக்கினார். சோபியா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செளத் பூங்காவில் மகாத்மா காந்தியின் சிலையை ராம்நாத் கோவிந்தும், பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவும் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி சிலை வடிவில் நிரந்தரமாக வசிப்பதற்கு அடைக்கலம் கொடுத்த பல்கேரிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து