காஷ்மீர் எஸ்.பி. வைத் இடமாற்றம்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
Kashmir SB 2018 09 07

ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், 1986-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான எஸ்.பி.வைத், தற்போது போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தக்க ஏற்பாடுகள் செய்யும் வரை, காவல்துறை தலைவர் பதவிக்கு 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான தில்பக் சிங் பொறுப்பு வகிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து