துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா ரெட்டை வீழ்த்தி இந்தியா ப்ளூ வெற்றி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      விளையாட்டு
Duleep Trophy India Blue 2018 09 07

Source: provided

திண்டுக்கல் : துலீப் கிரிக்கெட்டில் இந்தியா ரெட்டை இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ப்ளூ வீழ்த்தி வெற்றி பெற்றது.

பேட்டிங் தேர்வு

துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா ப்ளூ - இந்தியா ரெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 4-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ப்ளூ பேட்டிங் தேர்வு செய்தது. என் கங்ட்டா (130) சதம் அடிக்க இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சில் 167.3 ஓவரில் 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ஹிர்வானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பாலோ-ஆன்...

பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் தொடங்கியது. இந்தியா ப்ளூ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 182 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஸ்வாப்னில் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 359 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ரெட் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் இந்தயா ரெட் திணறியது. முதல் இன்னிங்சில் 182 ரன்களில் ஆட்டமிழந்த இந்தியா ரெட், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா ப்ளூ இன்னிங்சில் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹூடா, சவுரப் குமார் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து