முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      உலகம்
Jaishankar 2023 04 09

Source: provided

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு நான்கு நாள் பயணமாகச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியாவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இந்த மசோதா குறித்து எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவை ஆதரித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த மசோதாவில் எங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் குறித்தும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மசோதா வரும்போது, நாங்கள் அந்தப் பாலத்தைக் கடப்போம்” என்று கூறினார்

முன்னதாக, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் போது, ​​அவர் இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி முக்கியமாக குறிப்பிட்டார். “இந்த இரு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெயில் 70 சதவீத வாங்குகின்றன என்றும், இவர்களே புதினின் போர்ச்சக்கரத்தை சுழற்றுகின்றனர்” என்றும் கிரஹாம் குறிப்பிட்டார்

தற்போது ரஷ்யாவிலிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இது இந்தியாவின் எரிசக்தி தேவைகளில் சுமார் 40-45 சதவீத அளவுக்கு பூர்த்தி செய்கிறது. கடந்த மே மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு 1.96 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.a

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து