ஜீ.வி., சாலினி பாண்டே நடிக்கும் ‘100% காதல்’

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      சினிமா
GV-Prakash-Kaadhal

Source: provided

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் அவர் இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் எம்.எம்.சந்திரமௌலி. இவர் 30 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் 6 ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

பாகுபலி, ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி விநியோகித்தவர் ஆவார். இவர் தற்போது தெலுங்கு பட இயக்குனர் சுகுமாருடன் இணைந்து ‘100% காதல்’ என்ற தமிழ் படத்தை இயக்கி உள்ளார்.

இதில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், சாலினி பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமைய்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். 6 குழந்தைகள் நட்சத்திரங்கள் அறிமுகமாகி உள்ளது. யுவன் மயில்சாமி ஒளிப்பதிவு செய்ய தோட்டாதரணி கலையமைத்துள்ளார். ஜீ.வி.இசையமைக்க சாய்வில்லியம்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்.படம் பற்றி இயக்குனர் சந்திரமௌலி கூறுகையில், ஜீ.வி.கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.

அவரது மாமா மகளாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுக்குள் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருக்கும். அது பின்னர் எப்படி காதலாக மாறுகிறது என்பதை ரொமாண்ட்டிக் காமெடி படமாக எடுத்துள்ளோம்.

சென்னையில் மொத்தம் 56 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அக்டோபரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து