எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத் : பிரிக்கப்பட்டுள்ள குழந்தையுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு ஹைதாராபாத் பெண்ணொருவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்தப் பெண் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மூலம் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு:
ஹைதாராபாத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண்ணுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு துபாய் சென்று வசிக்கத் துவங்கிய அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெண்ணை அவரது கணவர் தினமும் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் வரை இந்த சித்திரவதை தொடந்துள்ளது. பின்னர் சிறிதுநாளில் அவரது கணவரின் உடன்பிறந்தவர்கள் அந்த பெண்ணிடமும், அவளது தந்தையிடமும் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். குழ்நதை அவர்களுடன் துபாயில் உள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் திரும்பி ஒருமாதம் கழிந்த பின்னர் அப்பெண் சரூர் நகர் பகுதி காவல் நிலையத்தில், தனது கணவர் மீது தன்னை ஏமாற்றியதாகவும், துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.
பின்னர்தான் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டு துபாயில் உள்ள குழந்தையுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு அந்த பெண், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தற்போது உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025