முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.  டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் பிரதமர்

மன்மோகன் சிங் பேசியதாவது:-மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, கைலாஷ் யாத்திரையில் கொண்டு வந்த புனித நீரை அங்கு தெளித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜ்காட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து