எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது.
வரும் 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருந்தது. அதில் தேர்வு விவரங்களையும் தெரிவித்திருந்தது. இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளுக்கான பாடத்திடத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் - தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என டி.என்.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


