முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களில் 9 அடி சரிவு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்,கடந்த 10-ந் தேதி 118.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று காலை 109.73 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 9 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 -வது முறையாக நிரம்பியது...கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் பெய்த கன மழையால் அதே மாதம் 17-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 19-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வரத்து அதிகரித்ததால் 27-ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நடப்பாண்டில் 4 முறை அணை நிரம்பியது.

தண்ணீர் திறப்பு....கடந்த 62 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது. ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 2006-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி வரை தொடர்ந்து 428 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 119 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9 அயிரத்து 96 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திக்கு காவிரி ஆற்றில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், 800 கன அடி கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

9 அடி சரிவு....அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது. கடந்த 10-ந் தேதி 118.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று காலை 109.73 அடியாக இருந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 9 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து