காரைக்குடி தமிழ்நாடு கெமிக்கல் ஆலையின் இயக்கத்தால் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக கருத்தாய்வுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      சிவகங்கை
30 sivagangai news

        சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல் ஆலையின் இயக்கத்தால் சுற்றுவற்றார பகுதிகளில் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சார் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினார் கே.ஆர்.ராமசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் மற்றும் கோவிலூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் கருத்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு கெமிக்கல் ஆலையின் இயக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறியதுடன் 40 ஆண்டுகாலம் மிகவும் வாழ்வதாரமும், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்ட நிலையில்; வாழ்ந்து வருகிறோம். வருங்கால சந்ததியினர் நல்லமுறையில் வாழ்ந்திட இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர்; பேசுகையில் மக்களின் நலனில் எப்பொழுதுமே அக்கரைகொண்டு செயல்படக்கூடிய மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் எனக்கு மிகுந்த பங்குண்டு எனவே ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழலாளர் நலத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் மூலம் முறையாக ஆயு;வு செய்ய உத்தரவிட்டு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளது. மேலும் பொது சுகாதராத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவர்கள் தலைமையிலான குழு அமைத்து ஆலையை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்னும் ஒருவார காலத்தில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணி துவங்;கப்படுகின்றன. இவ்வாறு ஆய்வு செய்து பெறப்படும் அறிக்கைகளை மைய்யமாக வைத்துக்கொண்டு இப்பகுதியில் உள்ள மக்களின் மூலம் குழு தேர்வு செய்து அந்தகுழுவுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்து நல்ல தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மாவட்ட நிர்வாகத்தை ஆலையின் செயல்பாடு குறித்து முழுமையாக கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சார் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
           இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா, மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், ஆலை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து