முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண நிகழ்ச்சியில் சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட பையன்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

மணிலா, பிலிப்பைன்ஸ் மணிலாவில் ஆல்பிரட் லு மற்றும் ஜமைக்கா ஆகியோருக்கு இடையே திருமணம் நடந்தது. அதன் பிறகு சர்ச் வாசலில் வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கத் திட்டமிட்டார் புகைப்படக் கலைஞர் ஜான் கிளக்.

மாப்பிள்ளைக்குப் பின்னால் மாப்பிள்ளைத் தோழர்களையும், பெண்ணுக்குப் பக்கத்தில் தோழிகளையும் வரிசையாக நிறுத்தினார். மாப்பிள்ளை, பெண்ணுக்கு முன்பு ஒரு குட்டிப் பையனும், ஒரு சிறுமியும் நிறுத்தப்பட்டனர். மாப்பிள்ளை, பெண்ணை முத்தமிட வேண்டும். அதை அழகாக படம் பிடிக்க வேண்டும் என்பது போட்டோகிராபரின் நோக்கமாக இருந்தது.

புகைப்படம் எடுப்பதற்கு முன்பு அந்தக் குட்டிப் பையனையும், பாப்பாவையும் கண்ணை மூடிக்கோங்க என்று கூறினார் போட்டோகிராபர் ஜான். அவர்களும் அது போலவே செய்தனர். அந்தப் பையன் மட்டும் எதுக்கு கண்ணை மூடச் சொல்றாங்க என்று எண்ணி லேசாக கையை எடுத்துப் பார்க்க செய்தான். இதையடுத்து கண்டிப்பாக அந்த பையனை கண்ணை மூடச் சொல்லி எல்லாவற்றையும் செட் செய்த போட்டோகிராபர் ஜான் கிளிக் செய்வதற்கு முன்பு கிஸ் பண்ணுங்க என்று கூறினார். அப்போதுதான் அந்த காமெடி அரங்கேறியது.

மாப்பிள்ளை பெண்ணுக்கு அழுத்தமாக முத்தம் கொடுத்த போது அந்த குட்டிப் பையனும் படு வேகமாக சிறுமியின் உதட்டில் முத்தமிட்டான். குட்டிப் பையனின் செயலைப் பார்த்து மாப்பிள்ளை, பெண் உள்பட அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர். எந்த விரசமும் இல்லாமல் குழந்தைத்தனத்துடன் நடந்து விட்ட இந்த திடீர் முத்தக் காட்சி அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து