போடி அருகே விவசாய கண்காட்சி: தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      தேனி
16 agri news

போடி, -     போடி அருகே நடைபெற்ற விவசாய கண்காட்சியில், தோட்டக்கலை கல்லூரி மாணவிகள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
     பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ஹேமலதா, இந்துமதி, கமலி, கார்த்திகை பிரியா, கார்த்திகா, கவிதா, மருதவீரு, மீனா, மோனலிசா, முபச்ரா பேகம் ஆகிய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இம்மாணவிகள் சார்பில் போடி அருகே குண்டல்நாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாய கண்காட்சி நடைபெற்றது.
     கண்காட்சியில் பசுமை குடில், காளான் வளர்ப்பு, நுண்ணுயிர் உரம் தயாரித்தல், மாடித் தோட்டம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், பட்டுப்புழு வளர்த்தல் போன்றவை குறித்தும் விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இவற்றை விவசாயிகள் பலர் பார்வையிட்டனர். அவர்களுக்கு மாணவிகள் விளக்கினர்.
     கண்காட்சியை ராசிங்காபுரம் வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ், கூழையனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் பள்ளி மாணவர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். கண்காட்சி பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து