முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி அருகே மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி, -    போடியில், பள்ளி அருகே மதுபாட்டில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     மிலாடி நபியை முன்னிட்டு புதன் கிழமை அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் போடி பெரியாண்டவர் கோவிலை அடுத்து பள்ளி அருகே மது பாட்டில்கள் விற்பனை  செய்வதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில் போடி குலாலர்பாளையம், வாமணன் தெருவை சேர்ந்த செல்வம் (58) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்,  கஞ்சா ஆகியவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.     இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது 250 மது பாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை இருந்துள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மது பாட்டில்கள் மற்றும்  கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து