முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம்அரண்மனையில் உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு தூய்மை பணி

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-     உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
    ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டில் உள்ள பலதரப்பட்ட இனம், மொழி ஆகியவற்றால் வளமான பண்பாடு, வரலாறு இருக்கும். அவற்றைப் பற்றி  அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மாணவ மாணவியரிடம் உண்டாக்கவும்,  மரபு சார்ந்த சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசெல்லவும், ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் 100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்க இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கின்றன. மரபு சின்னங்களை பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அரசு மட்டும் பாதுகாக்க முடியாது. பாரம்பரியச் சின்னங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் விழா, பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    இவ்விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி  தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை, ஒரு கோயிலைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதையும், இதன் ஓவியங்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள்கள், ஈட்டிகள், வளரிகள் பற்றி அரண்மனைக் காப்பாட்சியர் ஆசைத்தம்பி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து ஆகியோர் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து