தேனியில் குழந்தைகள் இல்ல மாணவ மாணவர்களுக்கான தடகள போட்டிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தேனி
6 sports news

தேனி - தேனியில் சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் விதமாக  தடகள போட்டிகள் மற்றும் குழு போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 குழந்தைகள் இல்லங்களிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். மேலும் தன்னம்பிக்கை மற்றும் நல்லொழுக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து