பெரியகுளத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்ததின விழா

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      தேனி
17 Periyakulam   news

தேனி- கழக நிறுவனர் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 பிறந்த நாள் விழாவை கழகத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடினர்.
 பெரியகுளத்தில் பழைய பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு நகர செயலாளர் என்.வி.ராதா, மதுரை ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட  இருசக்கர வாகனத்தில் கழக தொண்டர்கள் அணிவகுத்து பெரியகுளத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று கழக கொடியை ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இவ்விழாவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம்,  மாவட்ட பிரதிநிதி அன்பு, மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் டி.கள்ளிப்பட்டி சிவக்குமார்,  வடகரை துரைப்பாண்டி, நகர அம்மா பேரவை செயலாளர் காஜாமுயுனுதீன், பூக்கடை கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானபட்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கழக கொடியை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இவ்விழாவில்  ஒன்றிய அவைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய இணை செயலாளர் சிவகாமிபெரியசாமி, வழக்கறிஞர் பிரிவு ஜெயராமன், பெரியகுளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், தொழில்நுட்ப பிரிவு தீபன், கெங்குவார்பட்டி சுப்பிரமணி, சில்வார்பட்டி சிவமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து