முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நலத் துறையின் மாவட்ட திட்டக்குழு கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம்  மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்  தலைமையில், சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள மகிளா சக்தி கேந்திரா திட்டம் மற்றும் மகளிருக்கான  ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகிய திட்டங்கள் தொடர்பான மாவட்ட திட்டக்குழு கூட்டம்; நடைபெற்றது. ராமநாதபுரம் சார்பு நீதிபதி வி.ராமலிங்கம் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்;டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் மூலம் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்போடு சமூக நலத்துறையின் வாயிலாக மகிளா சக்தி கேந்திரா திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, கணினி பயிற்சி, தனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் சுகாதாரம் பேணுதல், ஊட்டச்சத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட உடல் ஆரோக்கிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேறு அரசு திட்டங்களை தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு கொண்டு சேர்த்திடும் விதமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இதில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
 அதேபோல, சமுதாயத்தில் துரதிஷ்டவசமாக வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் பெண்களை பாதுகாத்து மறுவாழ்வு வழங்கிடும் நோக்கில் ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிகமாக சேவை மையம் செயல்படவுள்ளது.  இம்மையத்தில்; பெண் தலைமை நிர்வாக அலுவலர் பொறுப்பில் சட்டம், மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட பணியாளர்கள் பணிபுரிந்து, பாதிப்புக்குள்ளாகும் பெண்ணிற்கு  தேவையான மருத்துவ உதவி, சட்ட உதவி மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். இதில் அனுமதிக்கப்படும் பெண்கள் தங்களது குழந்தைகளுடன்(பெண் குழந்தை எல்லா வயதிலும், ஆண் குழந்தை 8 வயது வரையிலும்) அதிகபட்சம் 5 நாட்கள் வரையில் ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பி.முல்லைக்கொடி, சமூகநல அலுவலர் சி.குணசேகரி,  காவல் துணை கண்காணிப்பாளர் ரவீந்திரபிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், மாவட்ட  குழந்தைகள்  பாதுகாப்பு  அலுவலர் சி.துரைமுருகன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து