முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வடக்குத்தொகுதியில் நலிவுற்றோர்களுக்கு ட்ரை சைக்கிளைராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை வடக்குத் தொகுதியில் நலிவுற்றோர்களுக்கு ட்ரை சைக்கிளை வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
மதுரை வடக்குத்தொகுதியிலுள்ள 40 - வது வார்டைச் சேர்ந்த காந்தி என்ற கூலித்தொழிலாளி சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்தில் பிழைப்புக்காக ட்ரை சைக்கிள் வேண்டும் என்று வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தார். அக்கோரிக்கையினை ஏற்று மதுரை வடக்குத்தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் கூலித்தொழிலாளிக்கு நேற்று ட்ரை சைக்கிளை தனுது சொந்த நிதியிலிருந்து வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கே.ஜெயவேல், மதுரை புறநகர் மவாட்டஇளைஞர்அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி,செல்லப்பாண்டி,பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன், வட்ட செயலாளர்கள் என்.ஆறுமுகம், உத்தங்குடி மகேஸ்வரன், தங்கப்பாண்டி, ஏ.காஜாமற்றும் நிர்வாகிகள் கே.கே.ஆர்.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.பேசியதாவது-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியதன் மூலம் அம்மாவின் கனவை நிறைவேற்றிய அரசாக இந்த அரசு உள்ளது. தற்போது வார வாரம் பொதுமக்களிடத்தில் தொகுதி மக்களின் சார்பில் குறை கேட்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது எனது நிதியிலிருந்து வரும் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகின்றேன். தற்போது கூட கூலித்தொழிலாள் தனக்கு ட்ரை சைக்கிள் வேண்டுமென்று விண்ணப்பம் அளித்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து எனது சொந்த நிதியிலிருந்து அவருக்கு வழங்கியுள்ளேன். இந்த வடக்குத்தொகுதியில் தற்போது எனது சட்டமன்ற உறுப்பினர் நிதி மட்டுமல்லாது தமிழகஅரசிடமிருந்து சிறப்பு நிதி பெற்று பல்வேறு திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை வடக்குத்தொகுதி ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியாக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து