முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊனமுற்றோர், முதியோர் 5,19-ந்தேதி தரிசனம் செய்ய ஏற்பாடு

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊனமுற்றோர், முதியவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு பிப்ரவரி 5-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

வருகிற 12-ந்தேதி  ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி விழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணிமுதல் காலை 9 மணிவரை சூரியஜெயந்தி விழா நடைபெறும். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் விழாவாகும். தொடர்ந்து 7 வாகனங்களில் சாமி ஊர்வலம் நடைபெறும்.

இந்த விழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ தலைமையில் நடந்து வருகிறது.

மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு பிப்ரவரி 5-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 மாத குழந்தை முதல் 1 வயது குழந்தை வரை அவர்கள் பெற்றோர்களுடன் பிப்ரவரி 6-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நடைபெறும். திருப்பதி கபிலேஸ்வரர் சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நடைபெறும். மேலும் இந்த ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பில் தலைமுடி செலுத்தும் கல்யாண கட்டா அலுவலக பவனம், காலணிகள் வைக்கும் அறைகள் ஆகியவை புதிதாக கட்டப்பட உள்ளது. கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் மட்டும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.81 கோடியே 88 லட்சமாகும்.

இந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரூ.86 கோடி 12 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதேபோல், அன்னபிரசாதம் கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் மட்டும் 49 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019) 43 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து