முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
Armstrong 2025-07-05

Source: provided

சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், நினைவுப் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பொத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி முழு உருவச் சிலையும் நேற்று திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கினார் . கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த கொடியில் யானை தனது தும்பிக்கையில் பேனா வைத்திருப்பது போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து