முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      அரசியல்
EPS 2023 03 27

சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'  பிரசார பயணம் தொடர்பான இலச்சினை மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்திற்கான பாடலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம். தீய சக்தி தி.மு.கவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை 7- ந் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் தொடங்க உள்ளேன். தி.மு.க.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எல்லாம் எங்களோடு அணி சேர வேண்டும். வீடு வீடாக போய் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி, நான் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர். உடம்புக்கு உயிர் முக்கியம் என்பதுபோல, வெற்றிக்கு தேர்தல் வாக்குறுதி ரொம்ப முக்கியம். இப்போதே அறிவித்துவிட்டால் நீர்த்துப் போய்விடும். தேர்தல் நேரத்தில் அற்புதமாய் வெளிவரும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். யாரெல்லாம் தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து