முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பரமுகூர்த்தத்துடன் தொடக்கம்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

 அழகர்கேவில் - மதுரை சித்திரரைத் திருவிழா உலக பிரசித்திபெற்றதாகும். மதுரை மீனாட்சியம்மன்கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும் அதைதொடர்ந்து கள்ளழகர் வைகையற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறும் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் வருகிற ஏப்ரல் மாதம் அழகர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
 108 வைஷ்னவ தலங்களில் ஒன்றானது மதுரை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவிலாகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெரும் திருவிழா மிக முக்கியமானதாகும்.இந்த விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பரமுகூர்த்தவிழா நேற்று காலையில் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடசலாபதி பெருமாள் கோவிலில் நடந்தது. இதில் மீனாட்சிஅம்மன் கோவிலில் கூடலழகர் பெருமாள்கோவில்,ஆகிய கோவில்களைச் சேர்ந்த பட்டர்களையும்,நிர்வாகத்தினரையும்,கள்ளழகர் கோவில் பட்டர்களும்,நிர்வாகத்தினரும் தல்லாகுளம் கோவிலில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து  சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
 அன்று மாலையில் சப்பரமுகூர்த்தவிழா மேளதாளம் முழங்க தொடங்கியது இதில் ஆயிரம்பொண் சப்பரத்திற்க வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது.தொடர்ந்து பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பெருமாளுக்க சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடந்தது.  அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் நிர்வாக அதிகாரி மாரிமுத்து,மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து