முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 49 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து, மருத்துவமனை அருகிலும் துப்பாக்கிசசூடு நடந்தது. கார் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் புகுந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 49 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதன் இடையே, கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மற்றொரு மசூதியிலும், மருத்துவமனை வாசலிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், மற்றொரு இடத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவன், அதனை சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளான்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி வீரர்கள் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பத்திரமாக ஓட்டலில் உள்ளதாகவும், ஆனால், அதிர்ச்சியில் உள்ளனர் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள். இது எதிர்பாராத வன்முறை சம்பவம். துப்பாக்கிச்சூடு நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர்  என்று அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து