கமுதி பங்குனி பொங்கல் விழா, சேத்தான்டி வேடமணிந்து பக்தர்கள் வழிபாடு

புதன்கிழமை, 20 மார்ச் 2019      ராமநாதபுரம்
20 sathandi kamuthi

 கமுதி, - கமுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து, நேர்த்திகடன் செலுத்தினர்.
கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் மார்ச் 12 ல், தொடங்கியது.  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தினமும், அம்மன் நகர் வலம் வருதல், காமதேனு, ரிஷபம், குதிரை, ரிஷப வாகனம் மற்றும், மயில் வாகனத்திலும் நகர் வலம் வந்து, கழுகேற்றம், யானை வாகனம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காணிக்கை செலுத்தி, சிம்ம வாகன ஊர்வல நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்ரீமுத்துமாரியம்மன் சூரசம்ஹாரம் செய்தல், பொங்கல் வைத்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  முக்கிய நாளாள புதன்கிழமை அக்கினி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திகடன், பூக்குழி இறங்குதல், அன்னபறவை வாகனத்தில் நகர் வலம், மஞ்சள் நீராட்டு, சேத்தாண்டி வேடம், அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உடலில் அம்மை உட்பட தோல் நோய்களால் 300 ஆண்டுகளுக்கு முன், கமுதி மக்கள் பலர் பாதிக்கபட்டநிலையில், பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து, ஸ்ரீமுத்துமாரியம்மனை வழிபட்டனர். அதனால் மக்கள் உயிர் இழப்பிலிருந்தும், தோல்நோய்களிலிருந்து காக்க, ஆண்டுதோறும் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நிகழ்ச்சியில், பக்தர்கள் கமுதி செட்டி ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, சேத்தாண்டி வேடமணிந்து, வேப்பிலை சகிதமாக, கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்துவது, 300 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியமாக உள்ளது. இதனை தொடர்ந்து அக்கினிசட்டி எடுக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திகடன் செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கமுதி முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்தனர். கமுதியை சுற்றியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து